மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு 2022 ஜனவரி 1 க்கான அகவிலைப்படி உயர்வு அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வு பெற்றவர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வது ஊதியக்குழு பரிந்துரை:

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியாகும். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப, மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA மற்றும் DR அளவுகளை மாற்றி அறிவிக்கிறது. ஊழியர்களின் DA அவர்கள் நகர்ப்புற அல்லது கிராமப்புறத் துறைகளில் பணிபுரிகிறார்களா என்பதைப் பொறுத்து மாறுபடும். இறுதியாக அக்டோபர் மாதம் அரசு அகவிலைப்படியை 3% உயர்த்தியது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசின் அதிரடி அறிவிப்பு!

இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மொத்தம் தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இந்த DA உயர்வின் மூலம் இந்தியா முழுவதும் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வு பெற்றவர்களும் பயனடைந்தார்கள். ஜேசிஎம் தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தனது அறிக்கையில், அரசிடம் கவுன்சில் DA உயர்வு தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதுவரை எந்த முடிவும் அறிவிப்படவில்லை. மேலும், JCM விரைவில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து விவாதிக்கப்படும் என்றும், வரவிருக்கும் தேர்தல்கள் காரணமாக, 18 மாத நிலுவைத் தொகை குறித்த உறுதியான விவரத்தை அரசு கூற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் ரூ.2 லட்சமாக அரசு வழங்கலாம் என்றும் முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here