TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுத உள்ளவர்கள் கவனத்திற்கு – OMR Sheet Shading! முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுத உள்ளவர்கள் கவனத்திற்கு - OMR Sheet Shading! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுத உள்ளவர்கள் கவனத்திற்கு - OMR Sheet Shading! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுத உள்ளவர்கள் கவனத்திற்கு – OMR Sheet Shading! முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக வருகிற மே 21ம் தேதி அன்று குரூப் 2, 2ஏ பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு 200 கேள்விகளை கொண்டது. தற்போது இத்தேர்வுக்கு OMR Sheet-ல் என்ன விவரங்கள் நிரப்பப்பட வேண்டும்? எப்படி 3 மணி நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்? என்பது பற்றி பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்படுகிறார்கள். அதன்படி குரூப் 2, 2ஏ பணியிடத்திற்கான தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்குரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை TNPSC தேர்வாணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு 200 கேள்விகளை கொண்டது. அத்துடன் 3 மணி நேரம் அதாவது 180 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதாவது 180 நிமிடங்களில் 200 கேள்விகளுக்கு OMR Sheet-ல் சரியாக Shading செய்ய வேண்டும். தற்போது OMR Sheet-ஐ எப்படி நிரப்ப வேண்டும்? தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று பார்ப்போம். இதில் முதலாவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளபடி கருப்பு நிற பந்து முனை பேனாவை பயன்படுத்த வேண்டும். இதில் வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். இதையடுத்து தற்போது OMR Sheet-இல் இரண்டு பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் முதல் பகுதியில் விடையளிக்க கூடிய பகுதி இடம்பெற்றிருக்கும். இரண்டாம் பகுதியில் சுய விவரங்கள் அடங்கிய பகுதி இடம்பெற்றிருக்கும்.

OMR Sheet-ஐ நிரப்ப வழிமுறைகள்:

1. OMR Sheet-ன் இரண்டாம் பகுதியில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.

2. தேர்வு துவங்கும் முன் தேர்வறையில் உங்களின் கையொப்பத்தை முதல் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.

3. இதையடுத்து OMR Sheet-ல் தங்களின் பெயர், பதிவெண், பாடம், தேர்வு மையம், தேதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கும். இதனை தேர்வர்கள் சரியாக உள்ளதா என்று கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.

4. அவ்வாறு சரியான தகவல்கள் இடம்பெறவில்லை எனில் தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்து புதிய OMR SHEET பெற்று தங்களின் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.

5. அடுத்ததாக வினாத்தாள் தொகுப்பு எண்ணை உள்ளிட்டு அதற்குரிய இடங்களில் ஷேடு செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

6. அதன்பின் தேர்வு தொடங்கிய பிறகு ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கபட்டிருக்கும் OPTION-ஐ சரியான முறையில் Shading செய்ய வேண்டும்.

7. மேலும் அனைத்து வினாக்களுக்கும் Shading செய்ய வேண்டியது அவசியமானதாகும். இதில் ஏதேனும் உங்களுக்கு தெரியாத கேள்விகள் இருந்தால் நீங்கள் “E” OPTION-ஐ தேர்வு செய்யலாம்.

8. இதையடுத்து அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்த பிறகு எத்தனை கேள்விகளுக்கு பதிலளித்தீர்கள் என்பதை கணக்கீட்டு அதற்குரிய இடத்தில் Shading செய்ய வேண்டும்.

9. இறுதியாக இடது கை பெருவிரல் ரேகை, மற்றும் கையொப்பம் விட வேண்டும்.

10. 200 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் அதனால் தெரியாத கேள்விகளில் அதிக நேரத்தை செலவிடாமல் அதை விட்டு விட்டு கடைசியாக நிரப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!