தீபாவளிக்கு எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம் – அரசின் அதிரடி நடவடிக்கை! பயணிகள் கவனத்திற்கு!

0
தீபாவளிக்கு எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம் - அரசின் அதிரடி நடவடிக்கை! பயணிகள் கவனத்திற்கு!
தீபாவளிக்கு எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம் - அரசின் அதிரடி நடவடிக்கை! பயணிகள் கவனத்திற்கு!
தீபாவளிக்கு எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம் – அரசின் அதிரடி நடவடிக்கை! பயணிகள் கவனத்திற்கு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அக். 21 முதல் அக். 23 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

புகார் எண்கள்:

இன்னும் தீபாவளி பண்டிகைக்கு 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள் பலர் புது துணி வாங்க கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். பல ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மேலும் வருகிற அக். 24 ஆம் தேதி திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் விடுமுறை இருக்கும். அதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

எனவே அரசு சென்னையிலிருந்து கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக 16,888 இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அண்மையில் செய்தி வெளியிட்டார். அதன் படி சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்தும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும், பூந்தமல்லி பை-பாஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும் மற்றும் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த அரசு – 2 லட்சம் பணியாளர்கள் அதிரடி பணி நீக்கம்?

Exams Daily Mobile App Download

இது மட்டுமின்றி தீபாவளி பண்டிகையை காரணமாக வைத்து ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து பயணிகள் புகார் அளிக்க, இலவச எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி பயணிகள் தங்களது புகார்களை 1800-45-6151, 044-2474-9002, 044-2628-0445 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகளின் நேரம் மற்றும் இயக்கம் பற்றி அறிய 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள 9445014450/ 9445014436 ஆகிய இரண்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக பயணம் செய்ய TNSTC-யின் செயலி மற்றும் http://www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!