இன்று முதல் தீவிரமடையும் முழு ஊரடங்கு – உலக நாடுகள் நடவடிக்கை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

0
இன்று முதல் தீவிரமடையும் முழு ஊரடங்கு - உலக நாடுகள் நடவடிக்கை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
இன்று முதல் தீவிரமடையும் முழு ஊரடங்கு - உலக நாடுகள் நடவடிக்கை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
இன்று முதல் தீவிரமடையும் முழு ஊரடங்கு – உலக நாடுகள் நடவடிக்கை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

தற்போது ஒமிக்ரான் மாறுபாடு தொற்று ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் பல்வேறு உலக நாடுகளும் இந்த நோய் தொற்றை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

முழு ஊரடங்கு

உலகளவில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் புதிய பாதிப்புகள் நாளடைவில் இரட்டிப்பு மடங்காக அதிகரித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் அறிவித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி அகவிலைப்படி (DA) உயர்வு 3% – AICPI தகவல்!

அந்த வகையில் அயர்லாந்து நாட்டில் 52 சதவீத வழக்குகள் ஒமிக்ரான் பாதிப்பால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 5,124 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 436 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இன்று (டிச.20) முதல் உணவகங்கள், பார்கள் மற்றும் கஃபேக்கள் அனைத்தும் தினசரி இரவு 8 மணிக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு, கலாச்சாரம், சமூகம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உட்பட எந்த உட்புற நிகழ்வுகளும் அந்த நேரத்திற்கு பிறகு நடைபெறாது. திரையரங்குகள் உட்பட, எந்த நிகழ்வுகளிலும் 50 சதவிகிதம் பேர் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்று கட்டுப்பாடுகள் குறித்து அயர்லாந்து சுகாதாரத் துறையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டோனி ஹோலோஹன் கூறுகையில், ‘அயர்லாந்தில் கொரோனா ஆதிக்கம் காரணமாக ஒமிக்ரான் தொற்று பரவல் இரண்டு வாரங்களுக்குள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

இது தவிர அமெரிக்கா, கனடா, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, ஹங்கேரி, மொரோக்கோ, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி உட்பட மேலும் 10 நாடுகளுக்குண்டான விமானத் தடை பட்டியலை நீட்டிக்க இஸ்ரேல் அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும், வரும் டிசம்பர் 22ம் தேதி முதல் பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற சிவப்பு பட்டியலில் உள்ள 59 நாடுகளுடன் இந்த நாடுகள் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் உறுப்பினர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு எதிராக நேர்மறை சோதனை செய்ததால் இந்த கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் லண்டன் மாநகரம் முழுவதும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தயாராகி வருகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்கள், முகக்கவசம், சமூக விலகல் ஆகியவற்றை அவசியமாக்கி, விடுமுறை நாட்களில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!