உலகத்தை மீண்டும் உலுக்க காத்திருக்கும் ஓமிக்ரான் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!

0
உலகத்தை மீண்டும் உலுக்க காத்திருக்கும் ஓமிக்ரான் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!
உலகத்தை மீண்டும் உலுக்க காத்திருக்கும் ஓமிக்ரான் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தியாவில் ஓமிக்ரான் துணை மாறுபாட்டுகளான BA.2 ,BA.2.75 ஆகியவை பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது கடந்த வாரத்தில் தொற்று பரவல் விகிதம் குறித்து இந்தியன் SARS-COV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஓமிக்ரான் பரவல்

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுபாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் கொரோனாவின் மறுபாடுகளான ஓமிக்ரானின் துணை மாறுபாடுகள் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் ஓமிக்ரானின் துணை மாறுபாடுகளான BA.2 மற்றும் BA.2.75 வைரஸ்கள் இந்தியாவில் கால் தடம் பதித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

INSACOG என்பது SARS-CoV-2 இல் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்க 54 ஆய்வகங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பானது சுகாதார அமைச்சகம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையின் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பானது உலகம் முழுவதும் ஓமிக்ரான் தொற்று ஏற்படும் விகிதம் குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. இதில் கடந்த வாரத்தை விட புதியதாக ஓமிக்ரானின் துணை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி போட்டு தீபாவளி ஸ்பெஷல் திட்டங்களை அறிவித்த Airtel,Jio,Vi – ரூ.29க்கு 2 ஜிபி டேட்டா!

மேலும் ஓமிக்ரானின் துணை மாறுபாட்டான BA.5 வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த வாரத்தை விட 84.8% இலிருந்து 86.8% ஆக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் இந்த ஓமிக்ரான் திரிபு கடும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!