இந்தியாவில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமிக்ரான் பிஏ.2.75 வைரஸ்? கவுன்சில் விளக்கம்!

0
இந்தியாவில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமிக்ரான் பிஏ.2.75 வைரஸ்? கவுன்சில் விளக்கம்!
இந்தியாவில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமிக்ரான் பிஏ.2.75 வைரஸ்? கவுன்சில் விளக்கம்!
இந்தியாவில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமிக்ரான் பிஏ.2.75 வைரஸ்? கவுன்சில் விளக்கம்!

உலக நாடுகளிடையே புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் பிஏ.2.75 வைரஸ் இந்தியாவிலும் பரவிக்கொண்டிருப்பதாக வெளியான தகவலுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ்

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பரவல் பெருந்தொற்று நோய் பல்வேறு வகையாக உருமாறி இன்று வரைக்கும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு உருமாறிய வைரஸால் இந்தியாவிலும் புதிய பாதிப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாகி இருக்கிறது. இப்போது கூட இந்தியா கொரோனா 4ம் அலைப்பரவலை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த நோய்த்தொற்றால் தினசரி 20,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

RRB தேர்வுக்கு தயாராவோருக்கான முக்கிய அறிவிப்பு – நாளை மாதிரி தேர்வு!

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இப்போது பல வகையாக உருமாறி உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதாவது, பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4, பிஏ-5 ஆகிய 5 வகைகளாக பரவிக் கொண்டிக்கும் ஒமிக்ரான் வைரஸ் குறித்து இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவின் புதிய வடிவமான பிஏ-2.75 என்ற வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இவ்வகை தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவில் மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தியாவை தவிர இன்னும் 7 நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார மையம் தகவல் அளித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் எந்த அளவுக்கு பரவக்கூடிய தன்மை கொண்டது, இதன் வீரியம் குறித்து கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பிஏ 2.75 வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறும் நிலையில், அதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பொதுவாக கொரோனா வைரஸின் உருமாற்றம் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இது புதிதல்ல. ஆனால் இந்தியாவில் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பது ஏற்கத்தக்கது அல்ல. இப்போது இந்த புதிய வைரஸ் மூலமாக தான் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதையும் உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த வைரஸ் குறித்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here