சென்னை ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி பழைய அட்டவணையிலேயே இயக்கம்!
கொரோனா காலகட்டத்தில் சென்னை புறநகர் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் அடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டது. இருப்பினும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் சென்னை புறநகர் ரயில் சேவை பழைய அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்:
தமிழகத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கின. மேலும் இந்த கொரோனா தாக்கம் அதிகப்படியான பேரழிவை ஏற்படுத்தி வந்ததால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இந்த வகையில் பேருந்து சேவை, ரயில் சேவை கடந்த 2020 மார்ச் மாதம் முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியது.
இந்தியாவில் மேலும் 54 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசு திட்டம்! லிஸ்ட் ரெடி!
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் தினம் தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த வகையில் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் தினம் தோறும் 658 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்? அரசு திடீர் விளக்கம்!
கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் கொரோனா கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் சென்னையில் மின்சார ரயில் சேவை எண்ணிக்கையை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.