மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முக்கிய தகவல்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - முக்கிய தகவல்!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - முக்கிய தகவல்! பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 20ம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் அகாலி தளம் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். ஓய்வூதிய திட்டம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மொத்தம் 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 16வது சட்டசபை தேர்தல் 20ம் தேதி நடைபெற்று மார்ச் 10ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இக்கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களம் காண இருக்கிறார். தொடர்ந்து சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். அதாவது, சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சுக்பிர் சிங் பாதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் மீட்டெடுப்பு, ஏழாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகள் நீக்கம், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர பணி, ஊழியர் நல வாரியம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை கவர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முக்கிய தகவல்!

பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 20ம் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் அகாலி தளம் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஓய்வூதிய திட்டம்

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களுக்கான வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மொத்தம் 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 16வது சட்டசபை தேர்தல் 20ம் தேதி நடைபெற்று மார்ச் 10ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இக்கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அலுவலகத்திற்கு வருவது கட்டாயம்!

அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களம் காண இருக்கிறார். தொடர்ந்து சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். அதாவது, சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சுக்பிர் சிங் பாதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் மீட்டெடுப்பு, ஏழாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகள் நீக்கம், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர பணி, ஊழியர் நல வாரியம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை கவர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here