தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் 2004ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்து கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசுப் பணிக்கு சென்றால் இறுதி வரை பொருளாதார சிக்கல் இன்றி வாழலாம் என்பது தான் மக்களின் நம்பிக்கை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது மக்களின் இந்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. எனவே விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பாமக மாநில இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்:

ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23ம் தேதி தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பை வரவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 24ம் தேதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது ராஜஸ்தான் மாநில அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏப்.1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அந்த மாநில முதல்வா் அறிவித்துள்ளார். அதுபோல தமிழகத்தில் திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல, தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதை தற்போது நடைபெறும் பேரவை கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான எண்ணேகொல்புதூர் திட்டம், பெரிய ஏரி கால்வாய் திட்டம், கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை ஆகிய திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் சுமுக உறவு இருந்தால்தான் மாநிலம் வளா்ச்சி அடையும். எனவே ஆளுநர், மாநில அரசுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். அதுபோல, மாநில அரசும் ஆளுநருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காக்கப்படும். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை தமிழக அரசே தோ்ந்தெடுக்கும் என்ற தீா்மானத்தை பாமக வரவேற்கிறது. இதுபோன்ற நடைமுறைகள் குஜராத் போன்ற பல மாநிலங்களில் உள்ளன. பாமகவில் பல புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2016-இல் மாற்றம், முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தோம். இப்போது அதை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் மக்களை சந்திக்க உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here