மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அருமையான வாக்குறுதிகள்!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிரச்சாரக் கூட்டத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் தெரிவித்த வாக்குறுதிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வாக்குறுதிகள்
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அத்துடன் மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின் வெளியாகும் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் முதல்வராக தற்போது சரண்ஜித் சிங் சன்னி உள்ளார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 20ம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது கூட்டங்களையும் மற்றும் பிரச்சாரங்களையும் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று (பிப்.19) பொது விடுமுறை – விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலியில் பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் கலந்து கொண்டார். இவர் தெரிவித்தாவது, சட்டப்பேரவைத் தேர்தலில் தான் ஆட்சி அமைத்தால் பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக கூறியுள்ளார். இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அமலில் உள்ள புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணி நிரந்தரமாக்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.