பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் ? – செவி சாய்க்குமா அரசு!

0
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் ? – செவி சாய்க்குமா அரசு!

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

2004 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கான பலன்கள் குறைவாகவும், அரசுக்கு அதிக பலன்கள் இருப்பதாகவும் பல்வேறு எதிர்ப்புகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை முதல் பள்ளி நேரங்களில் அதிரடி மாற்றம் அமல் – கல்வித்துறை உத்தரவு!

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசு தரப்பு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!