தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சீர்காழியில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தெரிவித்து உள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் அவர்கள் பல தேர்தல் வாக்கு உறுதியையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தங்களது தேர்தல் வாக்கு உறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – எப்போது கிடைக்கும்? முழு விவரம் இதோ!

மேலும் அந்த நேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்முறையில் இருந்து வருகிறது. மேலும் புதிய ஓய்வூதிய திட்டமானது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்களில் தரப்பில் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பாலாஜி,மாவட்ட பொருளாளர் மணிமாறன், துணைத்தலைவர் முத்துராமன், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர் தங்க சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் உள்ளிட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும். மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here