தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஏப்ரல் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ஏப்ரல் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - ஏப்ரல் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஏப்ரல் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20ம் தேதி அனைத்து வட்டக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி 2022ம் ஆண்டு முதல் உயர்த்தப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு 2022ம் ஆண்டு முதல் 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 7-வது ஊதிய கமி‌ஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32% ஆக உயர்த்தப்பட்டு அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இதனால் அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் வரை செலவினம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், கிராமப்புற நுாலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் இதனை வலியுறுத்தி ஏப்ரல் 20ம் தேதி அனைத்து வட்டக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!