தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் முடிவு இது தான்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் முடிவு இது தான்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் முடிவு இது தான்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் முடிவு இது தான்!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தில் முதல்வர் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் திட்டம் உள்ளது. இதன் படி ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியத்தொகையும் வழங்கப்படும். மேலும் பணியின் போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 2004 ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் பல்வேறு புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதனை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்த்தனர். மேலும் இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். இது குறித்து சட்டமன்ற மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நிதியமைச்சர் ராஜஸ்தான் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய போது ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி எடுத்துரைத்தார்.

அரசு துறையில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2022 – தமிழ் தெரிந்தால் போதும்! முழு தகவல்கள் இதோ!

மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் முதல்வர் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த பாணியில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் அரசு பின்வாங்கினால் திட்டத்தை அமல்படுத்தும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதி முடிவு என்பது தெளிவாகிறது. அதனால் முதல்வரின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!