தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – செப். 22 போராட்டம் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? - செப். 22 போராட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? - செப். 22 போராட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – செப். 22 போராட்டம் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் அமலில் உள்ள நிலையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி செப்டம்பர் 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

போராட்டம் அறிவிப்பு:

தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. அதில் உள்ள அம்சங்கள் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் பங்களிப்பு பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் ஊழியர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கவில்லை. அதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தனர். ஆனால் தற்போது ஒரு ஆண்டு ஆன நிலையில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் கூறுகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

NEET UG கவுன்சிலிங் 2022 – செப்டம்பர் 25 முதல் தொடக்கம்!!

Exams Daily Mobile App Download

ஆனாலும் அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 22 ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!