OLA Scooter EMI இல் வாங்கலாம், வங்கிகளின் பட்டியல் – செப்.8 முதல் விநியோகம்!

1
OLA Scooter EMI இல் வாங்கலாம், வங்கிகளின் பட்டியல் - செப்.8 முதல் விநியோகம்!
OLA Scooter EMI இல் வாங்கலாம், வங்கிகளின் பட்டியல் - செப்.8 முதல் விநியோகம்!
OLA Scooter EMI இல் வாங்கலாம், வங்கிகளின் பட்டியல் – செப்.8 முதல் விநியோகம்!

ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் EMI க்கான துவக்க கட்டணம் ரூ .2.999 முதல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா ஸ்கூட்டர்

தமிழகத்தை மையமாக கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஓலா நிறுவனம் அதன் S1 மற்றும் S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்தன. இந்நிலையில் ஓலா S1 வகை ஸ்கூட்டர்களின் விநியோகம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் மாதத்துக்குள் சுமார் 1,000 நகரங்களில் இதன் விநியோகங்களை தொடங்கும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் – அமைச்சர் பதில்!

முன்னதாக ஓலாவின் தயாரிப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,29,999 என கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 8 முதல் தொடங்கும் இந்த விநியோகத்தில் ஏற்கனவே ரூ.499 க்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஓலா எலக்ட்ரிக் பைக்குகளுக்கு ரூ.2,999 என்ற EMI திட்டத்துடன் வருகிறது. ஓலா S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்கள் மீதான கடனுக்காக ஓலா நிறுவனம் சில முக்கிய வங்கிகளை இணைத்துள்ளது.

அதன் கீழ் HDFC, ICICI வங்கி, IDFC வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா மூலதனம், YES வங்கி, AU சிறிய நிதி வங்கி, ஜன சிறிய நிதி வங்கி உள்ளிட்டவை ஆகும். இந்த ஓலா S1, ஒரு மணி நேரத்திற்கு 115 கிமீ வேகத்துடன், 40 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரிவர்ஸ் மோட், ஹில் ஹோல்ட் ஃபங்க்ஷன், டிரைவிங் மோட் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் சாவி இல்லாத பூட்டு மற்றும் திறத்தல் அமைப்பு, திருட்டு எச்சரிக்கை அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

10 வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள ஓலா ஸ்கூட்டர்கள் 8.5 KW மோட்டார் மற்றும் 3.97 kWh பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. இந்த நிறுவனம் ஆரம்பத்தில் 10 லட்சம் வருடாந்திர உற்பத்தித் திறனுடன் தொடங்கி, பின்னர் முதல் கட்ட சந்தை தேவைக்கு ஏற்ப, 20 லட்சம் வரை உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவடையும் போது, ஓலா தயாரிப்பு ஆலை ஆண்டு முழுவதும் ஒரு கோடி யூனிட் கொள்ளளவு கொண்டதாக மாறும் என தெரிகிறது. இது உலகின் மொத்த இரு சக்கர வாகன உற்பத்தியில் 15% தன்வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நாங்கள் அனைவரும் ஓலா இருசக்கர எலக்ட்ரிக் வாகனத்தை வரவேற்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!