ரூ.499க்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம் – மலிவு விலையில் தயாரிப்பு!

1
ரூ.499க்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம் - மலிவு விலையில் தயாரிப்பு!
ரூ.499க்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம் - மலிவு விலையில் தயாரிப்பு!
ரூ.499க்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு துவக்கம் – மலிவு விலையில் தயாரிப்பு!

நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையின் தொடர் அதிகரிப்பால் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது நாட்டம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ள ஓலா நிறுவனம் அதற்கான முன் பதிவையும் தற்போது துவங்கியுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவையில் முதலிடத்தில் இருந்து வரும் ஓலா நிறுவனம் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைத்துள்ளது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி இருக்கும் நிலையில், இவ்வகை வாகனங்கள் தற்போது விற்பனைக்கு வர உள்ளன. பொதுவாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இவ்வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் – போலி சான்றிதழ் விவகாரம்!

வழக்கமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையானது அதிகமாக காணப்படும் என்ற அச்சத்தால் இதை வாங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ள ஓலா நிறுவனம், ரூ.499 முன்பதிவு தொகையை மட்டுமே செலுத்தி புக் செய்து கொள்ளலாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னாக ஆந்திராவை சேர்ந்த ஒரு நபர் ரூ.499க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்துள்ளதோடு, தனது ஊரில் எலக்ட்ரிக் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்யும் இணையதளத்தில் சில பிரச்சனைகள் ஏற்படுவதாக சிலர் தெரிவித்திருந்தாலும், பலர் தங்களது முன்பதிவுகளை துவங்கியுள்ளனர். ஓலா நிறுவனம் தவிர டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ ஹோண்டா, எதர் உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இந்த வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெருமளவு ஆக்கிரமிக்கும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here