தமிழகத்தில் OLA & Uber வாகனங்கள் அரசின் கீழ் இயக்கம்? அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் OLA & Uber வாகனங்கள் அரசின் கீழ் இயக்கம்? அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் OLA & Uber வாகனங்கள் அரசின் கீழ் இயக்கம்? அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் OLA & Uber வாகனங்கள் அரசின் கீழ் இயக்கம்? அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் அரசு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் தகவல்:

தற்போது உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப துறை தான் முக்கிய பங்காற்றுகிறது. மக்களின் பலவிதமான பணிகளையும் எளிமையாக்கும் பணியினை குறிப்பிட்ட துறை செய்து வருகிறது. இதனால் தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய அம்சங்களும் கண்டறியப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், தற்போது தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

நேற்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயன்படுத்த எதுவாக வடிவமைக்கப்பட்ட ‘DOT’ எனும் ஸ்மார்ட் வாட்சை 25 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அரசின் இ-சேவை திட்டத்தின் அடுத்த கட்டமான இ-சேவை 2.0 திட்டத்தை பல்வேறு மேம்படுத்தப்பட்ட வகையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ’State family database’ திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முதல்வரின் புதிய அறிவிப்புகளால் தமிழ்கத்தை நோக்கி புதிய தொழில்நிறுவனங்கள் படை எடுக்க தொடங்கியுள்ளன.

தமிழக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு

இதனால் மாநிலத்தின் பொருளாதார நிலை வளர்ச்சியடையும். அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் அரசின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுவதை போல், தமிழகத்திலும், ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் அரசின் கீழ் செயல்பட தேவையான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயனடையும் படி இருந்தால், கண்டிப்பாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!