
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant (Electrical Engineering) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15/12/2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Consultant (Electrical Engineering) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/12/2023 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
Consultant (Electrical Engineering) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என OIL/ONGC/பிற பொதுத்துறை நிறுவனங்கள்/அரசு நிறுவனங்களில் இருந்து, ஓய்வு பெற்ற அனுபவமிக்க பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
OIL வயது வரம்பு:
15/12/2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
AICTE/UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 04 வருட கால Electrical Engineering இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் B.E. அல்லது B. Tech முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JOB ALERT..! வேலைவாய்ப்பை தேடும் நபர்கள் கவனத்திற்கு – நவ.17 & 18 நேர்காணல்!
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
Consultant (Electrical Engineering) : ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணம்(கள்)/சான்றிதழ்(கள்)/சான்றிதழ்(கள்) உடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15/12/2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.