Oil India நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்…!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கென மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 10வது / 12வது / Diploma / Degree முடித்திருக்க வேண்டும். இது தொடர்பான விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
- பணியின் அடிப்படையில் விண்ணாதரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தா\ளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமானதாகும். அனுபவம் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
- தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Walk-In Practical / Skill Test மற்றும் Personal Assessment ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.