விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – முழு பட்டியல் ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் - முழு பட்டியல் ரிலீஸ்!
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் - முழு பட்டியல் ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – முழு பட்டியல் ரிலீஸ்!

விஜய் தொலைக்காட்சியில் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பற்றியும் அதில் இந்த முறை கலந்து கொள்ள இருப்பவர்கள் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி

பலரும் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த முறை கண்டிப்பாக நிகழ்ச்சி வித்தியாசமானதாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், இந்த முறை பல புதிய முகங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். குறிப்பாக ஷகிலாவின் மகள் மிலா, மற்றும் நமீதா மாரிமுத்து என்று இரு திருநங்கை போட்டியாளர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி கூற அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அனைவர் மனதிலும் இடம் பிடித்து விடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் ஆர்டரில் ஜெயித்து காட்டுவாரா பாக்கியா? எதிர்க்கும் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ அடுத்த எபிசோட்!

இவர்களுடன் இந்த முறை காமெடிக்கு இமான் அண்ணாச்சி, நடிகை ப்ரியா ராமன், சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து பேர் பெற்ற நடிகர் சந்தோஷ், தொகுப்பாளினி ப்ரியங்கா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களை தவிர நிரூப் நந்தகுமார், கோபிநாத் ரவி, அபிஷேக் ராஜன் உள்ளிட்ட பெயர்களும் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் உத்தேச பட்டியலில் இருக்கும் பெயர்களாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சீசனிலும் ஷாலு ஷம்மு, பிரிட்டன் தொழிலதிபர் ரேணுகா பிரவீன் உள்ளிட்ட பெயர்களும் அடிபடுகின்றன.

புதுப்பொலிவுடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வைரல் ப்ரோமோ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்த முறை கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்கள் நேரடியாக நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. வரும் சனிக்கிழமை அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்க இருப்பவர்கள் விஜய் தொலைக்காட்சியின் செலவில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!