TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! விண்ணப்ப பதிவு துவக்கம்!

0
TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! விண்ணப்ப பதிவு துவக்கம்!
TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! விண்ணப்ப பதிவு துவக்கம்!
TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! விண்ணப்ப பதிவு துவக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 5,500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (பிப்ரவரி 23) வெளியிட இருக்கும் நிலையில் இதனை தொடர்ந்து விண்ணப்பதிவுகள் ஆரம்பமாக உள்ளது.

TNPSC குரூப் 2

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு இத்தேர்வுகளை நடத்துவதற்கு முடிவு செய்த அரசு அதற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன் படி 2022ம் ஆண்டில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட சுமார் 32 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

டாக்டரிடம் பேசுவதால் இனியாவை கண்டித்த ஜெனி, பதிலுக்கு அவமானப்படுத்திய இனியா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!

இதற்கிடையில் குரூப் 2A பதவிகளில் மொத்தம் 5,831 காலியிடங்கள் இருப்பதாகவும், குரூப் 4 பணியிடங்களில், 5,244 காலியிடங்கள் இருப்பதாகவும் TNPSC அறிவித்துள்ளது. இருப்பினும், இவை தற்காலிக எண்ணிக்கை ஆகும். இந்த காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதியன்று குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை TNPSC தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். அதன் படி குரூப் 2 தேர்வுகள் மே மாதம் 21ம் தேதியன்று துவங்க இருக்கிறது.

இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை இன்று (பிப்ரவரி 2) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தேர்வர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தேர்வர்கள் தங்களது விண்ணப்பதிவுகளை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து TNPSC குரூப் 4 ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா தனத்திடம் குடித்துவிட்டு ரகளை செய்த ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

முக்கியமான தேதிகள் இதோ:
  • TNPSC குரூப் 2 அறிவிப்பு தேதி – பிப்ரவரி 23, 2022
  • TNPSC குரூப் 2 ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி – மார்ச் 23, 2022
  • TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு தேதி – மே 21, 2022
  • TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவு தேதி – ஜூன் 5, 2022
  • TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி – செப்டம்பர் 2022
  • TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு தேதி – டிசம்பர் 2022
  • TNPSC குரூப் 2 நேர்காணல் தேதி – பிப்ரவரி 2023

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!