ஜூன் 28 முதல் 50% ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – மாநில அரசு!

0
ஜூன் 28 முதல் 50% ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி - மாநில அரசு!
ஜூன் 28 முதல் 50% ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி - மாநில அரசு!
ஜூன் 28 முதல் 50% ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – மாநில அரசு!

கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்ற நோய் பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்தியது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவாக பதிவாகி வருகின்றது. அதே போல் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் பாதிப்பினால் மரணம் அடைகின்றனர்.

தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை – ஏற்பாடுகள் தீவிரம்!

இதனால் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகள்

  • கோவில்கள், சர்ச் மற்றும் மசூதிகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 25 பேருக்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

TN Job “FB  Group” Join Now

  • 60 சதவீத பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டிருந்தால், 100 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • விளையாட்டு அரங்குகள், பார்க்குகள் மற்றும் ஜிம்கள் திறக்கப்படலாம். ஜிம்களில் பணிபுரிவோர் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூடுதலாக 3 மணி நேரம் செயல்படலாம்.

இந்த புதிய தளர்வுகள் நாளை காலை 5 மணி முதல் செயல்பாட்டிற்கும் வரும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து கொரோனா கால தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் டெல்டா வகை கொரோனா ஒருவருக்கு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!