ரேஷன் கடைகளில் காலாவதியாகும் பொருட்களுக்கு அலுவலரே பொறுப்பு – சுற்றறிக்கை வெளியீடு!

0
ரேஷன் கடைகளில் காலாவதியாகும் பொருட்களுக்கு அலுவலரே பொறுப்பு - சுற்றறிக்கை வெளியீடு!
ரேஷன் கடைகளில் காலாவதியாகும் பொருட்களுக்கு அலுவலரே பொறுப்பு - சுற்றறிக்கை வெளியீடு!
ரேஷன் கடைகளில் காலாவதியாகும் பொருட்களுக்கு அலுவலரே பொறுப்பு – சுற்றறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் காலாவதி ஆகிவிட்டால் அதற்கு ரேஷன் கடைகளில் இருக்கும் அலுவலர்களே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கம் சார்பில் சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மலிவு விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் தான் மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக திமுக கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைத்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் மக்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

அசாமில் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்நிலையில் தமிழக அரசு தற்போது பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் தற்போது ரேஷன் கடைகளில் உள்ள உணவு பொருட்கள் காலாவதி ஆவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பினை கூட்டுறவு சங்கம் தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த அறிக்கையில் ரேஷன் கடைகளில் இருக்கும் உணவு பொருட்களின் இருப்பு, வரவு மற்றும் விற்பனை ஆகியவற்றினை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் தமிழக ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் விற்கப்படாமல் தேங்கினால் அதற்கு அந்தந்த ரேஷன் கடை அலுவலரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here