தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வகையான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர் பணியிடத்தில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் வேலையை இழந்தனர். இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று நிலவரப்படி பொது பிரிவினராக இருப்பின் 18 முதல் 32 வயது வரை உள்ளவராகவும், BC மற்றும் MBC உள்ளிட்ட பிரிவினராக இருப்பின் 34 வயதிற்குட்டபட்டவராக இருக்க வேண்டும். இது தவிர மற்ற பிரிவினராக இருப்பின் 37 வயதிற்குட்டபட்டவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நிதி – முக்கிய அப்டேட் இதோ!

இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 104” என்ற முகவரிக்கு தபால் மூலமாக வருகிற ஜூன் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அத்துடன் விண்ணப்ப படிவத்துடன் ரூ.50 அஞ்சல் தலையுடன் கூடிய தங்களின் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here