IND vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்க அணி சிறப்பான பந்துவீச்சு – இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!

0
IND vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்க அணி சிறப்பான பந்துவீச்சு - இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!
IND vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்க அணி சிறப்பான பந்துவீச்சு - இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!
IND vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்க அணி சிறப்பான பந்துவீச்சு – இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!

இந்தியா தென்னாபிரிக்கா மோதும் 2 வது ஒரு நாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

IND vs SA 2வது ஒருநாள் போட்டி:

இந்தியா, தென்னாபிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் 2வது ஒரு நாள் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் KL ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக KL ராகுல், ஷிக்கர் தவான் களம் இறங்கினர். 10 ஓவர்கள் வரை இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் எடுத்தனர். 11 ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்த தவான் மார்க்கம் பந்தில் அவுட் ஆனார்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வரின் முடிவு!

பின்பு காலம் இறங்கிய முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 1 ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். மஹராஜ் பந்தில் தென்னாபிரிக்கா கேப்டன் பாவுமா கையில் கேட்ச் கொடுத்து கோஹ்லி அவுட் ஆனார். 12 ஓவர்கள் வரை தென்னாபிரிக்க அணி சிறப்பாக பந்து வீசியது. பின்பு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் KL ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. KL ராகுல் 54 பந்துகளில் 41 ரன்களும், பண்ட் 35 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 2வது போட்டியில் இந்திய அணி பிளேயிங் 11 யில் மாற்றம் செய்யாதது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாட்ஸ் ஆப் வாயிலாக திருப்புதல் தேர்வு!

இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கே), ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்

தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், குயின்டன் டி காக் (வி.கே.), ஐடன் மார்க்ரம், ஜான்மேன் மலான், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுல்வாயோ, கேசவ் மகராஜ், சிசண்டா மகலா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!