அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் உள்ள வங்கிகள் பண்டிகைகள் காரணமாக விடுமுறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள விடுமுறை நாட்களின் பட்டியல் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட நாட்டின் அனைத்து வங்கிகளுக்குமான விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாகவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து விடும். வார இறுதி நாளான ஞாயிறு, 2 மற்றும் 4ம் வாரத்தின் சனிக்கிழமை மற்றும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படும் தினங்களின் போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான விடுமுறை நாட்களாக உள்ளது.
IPL 2021 : ஆட்ட நாயகன் முதல் ஆரஞ்சு கேப் வரை – விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!
அக்டோபர் மாதம் முழுவதும் அதிக பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் இந்த மாதம் நம் நாட்டின் தேசிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் மாநிலங்களை பொறுத்து வேறு வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை நாட்களை பொறுத்து வங்கி விடுமுறை நாட்கள் வேறுபடும். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து தங்கள் பணிகளை முன்னதாக திட்டமிட்டுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள இனி வரும் நாட்களில் 10 நாட்கள் வங்கி விடுமுறை தினங்களாக உள்ளது.
விடுமுறை பட்டியல்:
- அக்டோபர் 16 – துர்கா பூஜை (தாசைன்) / (கேங்டாக்)
- அக்டோபர் 17 – ஞாயிறு
- அக்டோபர் 18 – கதி பிஹு (கவுகாத்தி)
- அக்டோபர் 19 – மிலாடி நபி (அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி , லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)
- அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள்/லட்சுமி பூஜை/ஐடி-இ-மிலத் (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா)
- அக்டோபர் 22 – வெள்ளிக்கிழமை ஈத்-இ-மீலாத்-உல்-நபி (ஜம்மு, ஸ்ரீநகர்)
- அக்டோபர் 23 – 4வது சனிக்கிழமை
- அக்டோபர் 24 – ஞாயிறு
- அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு, ஸ்ரீநகர்)
- அக்டோபர் 31 – ஞாயிறு