அக்.9ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!

0
அக்.9ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!
அக்.9ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!
அக்.9ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 100 சதவீத வாக்கு பெரும் நோக்கில் நாளை வேலூர் மாவட்டத்தில் பொது விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு, கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12,252 பதவிகளுக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் அறிவிப்பு – தாம்பரம் டூ நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட சுமார் 1,10,000 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மேலும், 17,130 காவலர்கள், 3,405 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 20,533 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 7 மணி முதல் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி மாலை முடிவடைந்தது. அதனை தொடர்ந்து 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

மேலும் நாளை வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 100 சதவிகித ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதனை மீறும் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!