தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!

0
தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு - அரசு அறிக்கை!
தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு - அரசு அறிக்கை!
தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இன்று மட்டும் புதிதாக 1,359 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு:

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மேலும், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினசரி தொற்று பாதிப்பின் முழு விவரங்களையும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,75,592 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தொற்று பாதிப்பினால் 20 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,754 ஆக உள்ளது. இன்று மேலும், 1,473 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 26,23,459 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,43,355 ஆகவும், இதுவரை மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,81,79,959 ஆகவும் உள்ளது.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!

தமிழக தலைநகரான சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மட்டும் 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் மொத்தம் 8,508 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் 41,185 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,887 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8,248 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here