NVS நிறுவனத்தில் 1616 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !

0
NVS நிறுவனத்தில் 1616 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !
NVS நிறுவனத்தில் 1616 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !
NVS நிறுவனத்தில் 1616 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் !

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Principal, Post Graduate Teacher, Trained Graduate Teachers and Miscellaneous Teachers ஆகிய பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 1616 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (22.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Navodaya Vidyalaya Samiti (NVS)
பணியின் பெயர் Principal, Post Graduate Teacher, Trained Graduate Teachers and Miscellaneous Teachers
பணியிடங்கள் 1616
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NVS பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) நிறுவனத்தில் காலியாக உள்ள Principal பணிக்கு 12 பணியிடங்கள் வீதமும், Post Graduate Teacher பணிக்கு 397 பணியிடங்கள் வீதமும், Trained Graduate Teachers பணிக்கு 1026 பணியிடங்கள் வீதமும், Miscellaneous Teachers பணிக்கு 181 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 1616 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NVS கல்வி விவரம்:
  • Principal பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Master Degree, B.Ed Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Post Graduate Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Post Graduate Degree, Master Degree அல்லது B.Ed Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • Trained Graduate Teachers பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, B.Ed Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Miscellaneous Teachers பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, B.Ed Degree, Master Degree அல்லது D.P.Ed Degree போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NVS அனுபவ விவரம்:
  • Principal பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / பொது அரசு நிறுவனங்களில் Vice Principal, Assistant Education Officer, PGT மற்றும் Lecture பதவிகளில் Level-12 (Rs.78800-209200), Level-10 (Rs.56100-177500) அல்லது Level-8 (Rs.47600-151100) என்ற ஊதிய அளவுகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / பொது அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
NVS வயது விவரம்:
  • Principal பணிக்கு அதிகபட்சம் 50 வயது என்றும்,
  • Post Graduate Teacher (PGT) பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும்,
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது என்றும் NVS நிறுவனத்தால் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST – 5 ஆண்டுகள், OBC – 3 ஆண்டுகள், பெண்கள் / PwD – 10 ஆண்டுகள், PwD (SC / ST) – 15 ஆண்டுகள், Pwd (OBC (NCL)) – 13 ஆண்டுகள், அரசு ஊழியர்களுக்கு – 5 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
NVS சம்பள விவரம்:
  • Principal பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 12 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Post Graduate Teacher (PGT) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 8 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 7 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.47.900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
NVS தேர்வு முறை:

இந்த NVS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Interview மற்றும் Personal Interaction வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NVS விண்ணப்பக்கட்டணம்:
  • Principal பணிக்கு ரூ.200/- என்றும்,
  • PGT பணிக்கு ரூ.1,800/- என்றும்,
  • மற்ற பணிகளுக்கு ரூ.1,500/- என்றும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் SC / ST / PH பிரிவை சேர்ந்தவராக இருப்பின் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NVS விண்ணப்பிக்கும் முறை:

இந்த NVS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 22.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

NVS Notification Link

NVS Application Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here