தமிழக மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மாணவர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் - முக்கிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் - முக்கிய அறிவிப்பு!
தமிழக மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகப்படுத்த எண்ணும் எழுத்தும் என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 4 முதல் Baseline Survey தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எண்ணும் எழுத்தும்:

தமிழகத்தில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுமே ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தியதால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட சரியாக எழுத, வாசிக்க தெரியாமல் திணறி கொண்டிருக்கின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதாவது, கடந்த 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகள் அனைத்திலும் 3 ஆம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய அடிப்படை கற்றல் திறன் அறிதல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – புது நம்பர்களில் இருந்து SMS வந்தால் உஷார்!

இந்த திட்டத்திற்கான புதிய செயல்முறைகளை தொடக்கக்கல்வி இயக்குனர் வழங்கியுள்ளார். மேலும், இந்த கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வேறு பள்ளிகளில் பயின்றுவிட்டது புதிதாக இந்த பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள் EMIS Unique Id எண்ணினை கொண்டு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here