JEE MAIN 2023 Admit Card வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ!!

0
JEE MAIN 2023 Admit Card வெளியீடு - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ!!
JEE MAIN 2023 Admit Card வெளியீடு - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ!!
JEE MAIN 2023 Admit Card வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இதோ!!

தேசிய தேர்வு முகமையால் (NTA) இந்த ஆண்டுக்கான JEE MAIN 2023 தேர்வுகள் ஜனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது ஜனவரி 24ம் தேதிக்கான Admit Card இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

JEE தேர்வு

இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் (B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில் மாணவர் சேர்க்கை JEE தேர்வுகள் மூலமாக நடைபெறுகிறது. இந்த தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேர்வு வருகிற ஜனவரி 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இனி தேவையில்லாமல் வாய்தா கேட்பவர்களுக்கு அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இத்தேர்வானது நாட்டில் உள்ள 290 நகரங்களிலும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 18 நகரங்களிலும் இத்தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், முதற்கட்டமாக இத்தேர்வின் அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனை தொடர்ந்து தற்போது (அமர்வு 1) ஜனவரி 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுக்கான Admit Card வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 25ம் தேதிக்கான Admit Card நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்வு 1க்கான Admit Card-ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலில் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. இதன் முகப்புப் பக்கத்தில், “JEE Main 2023 Admit Card” என்பதை கிளிக் செய்யவும்.

3. இப்போது தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட வேண்டும்.

4. இறுதியாக submit என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது JEE Main 2023 Admit Card காண்பிக்கப்படும்

5. இப்போது, உங்களின் JEE Main 2023 Admit Card-ஐ பதிவிறக்கம் செய்து, Print எடுத்து வைத்துக் கொள்ளவும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!