NRCB திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NRCB திருச்சி |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
NRCB திருச்சி காலிப்பணியிடங்கள்:
Project Assistant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Project Assistant வயது வரம்பு:
தேசிய வாழை ஆராய்ச்சி மைய அறிவிப்பின் படி, திட்ட உதவியாளர் பணிக்கு ஆண்களுக்கு அதிகபட்சம் 35 வயது மற்றும் பெண்களுக்கு 40 வயது என அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து M.Sc. / M.Tech. (Biotechnology / Molecular Biology / Biochemistry) with knowledge in molecular biology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
DRDO வேலைவாய்ப்பு 2023 – 50+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,31,100/-
Project Assistant தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.