மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) – மாதம் ரூ.50,000 வரை பென்சன்! முழு விவரம் இதோ!

0
மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) - மாதம் ரூ.50,000 வரை பென்சன்! முழு விவரம் இதோ!
மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) - மாதம் ரூ.50,000 வரை பென்சன்! முழு விவரம் இதோ!
மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) – மாதம் ரூ.50,000 வரை பென்சன்! முழு விவரம் இதோ!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இனி தனியார் துறை ஊழியர்களும் தங்களது ஓய்வு காலத்திற்கு பிறகு ரூ.50,000 வரை பணத்தை பெற்று அனுபவிக்கலாம். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம்:

பொதுவாக மாத சம்பளம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களும் தங்களது எதிர்கால தேவைக்காக குறிப்பிட்ட அளவு தொகையை சேமித்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்காக ஊழியர்களுக்கு PF உள்ளிட்ட சில சேமிப்பு சலுகைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டம் இப்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. இப்போது NPS திட்டத்தில் இணையும் சந்தாதாரர்கள் தங்களது ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை சேமிப்பதன் மூலம் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற முடியும்.

மயூராவை பார்க்க ஸ்கூலிற்கு சென்ற கோபி, பாக்கியாவிற்கு வந்த சந்தேகம் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்த NPS திட்டத்தில் சேருவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகனும் தகுதியுள்ளவர்கள் ஆவர். இப்போது, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியின்படி 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் KYC விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அந்த வகையில் NPS திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் கணக்கை திறந்து நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணை (PRAN) பெற வேண்டும். இத்திட்டத்தில் நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் நிதி மேலாண்மைக் கட்டணங்கள் ஆகியவை குறைவாக இருக்கும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் தனது சொந்த முதலீட்டு விருப்பம் மற்றும் ஓய்வூதிய நிதியை தாங்களாகவே தேர்வு செய்யலாம். மேலும் சிறந்த வருமானத்தை பெற ஆட்டோ தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம். மேலும், இந்த NPS கணக்கை ஒருவர் எந்த இடத்தில் இருந்தும் அணுக முடியும். இது தவிர POP-SP கிளை இல்லாமல் ஒருவர் வேலை செய்யும் இடம் அல்லது நகரத்தை மாற்றினாலும் இத்திட்டத்தின் கீழ் பங்களிப்புகளை தொடர்ந்து செலுத்தலாம்.

NPS கால்குலேட்டரை பயன்படுத்த:

  • NPS கால்குலேட்டரை பயன்படுத்த https://www.npstrust.org.in/content/pension-calculator என்ற இணைப்பை திறக்கவும்.
  • அதில் பிறந்த தேதியை உள்ளிடவும்.
Exams Daily Mobile App Download

  • இப்போது உங்கள் மாதாந்திர பங்களிப்பு தொகையை எந்த வயது வரை பங்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை கொடுக்கவும்.
  • தொடர்ந்து முதலீடு மற்றும் வருடாந்திர வருவாயில் உங்களது வருமானத்தை கொடுக்கவும்.
  • பிறகு உங்கள் மாதாந்திர பென்ஷன், வருடாந்திர மதிப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

ரூ.50,000 வரை பென்ஷன் பெற:

இந்த NPS திட்டத்தில் 25 வயதுடைய ஒருவர் மாதத்திற்கு ரூ.6,500 பங்களிப்பை செலுத்தினால் அவர் ஓய்வு பெறும் போது மொத்த பங்களிப்பு தொகை ரூ.27.30 லட்சமாக இருக்கும். இதில் ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால், மொத்த முதலீடு ரூ.2.46 கோடியாக அதிகரிக்கும். மேலும் கார்பஸின் 40 சதவீதத்தை வருடாந்திரமாக மாற்றும் போது மொத்த மதிப்பு ரூ.99.53 லட்சமாக உயரும். இதன் படி NPS சந்தாதாரர் ஓய்வு பெறும் போது மொத்தமாக ரூ.1.50 கோடியை பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!