NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத்தொகையில் வேலை – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத்தொகையில் வேலை - ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத்தொகையில் வேலை - ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NPCIL நிறுவனத்தில் ரூ.8,855/- ஊக்கத்தொகையில் வேலை – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 177 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் புரியுமாறு எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nuclear Power Corporation of India (NPCIL)
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 177
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்திய அணுசக்தி கழகம் பணியிடங்கள்:

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 177 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Electrician – 47
  • Fitter – 47
  • Instrument Mechanic – 18
  • Electronic Mechanic – 18
  • PSAA / COPA – 10
  • Welder – 10
  • Turner – 10
  • Machinist – 08
  • Refrigeration & Air Conditioning Mechanic – 09
    Trade Apprentice கல்வி விவரம்:

Trade Apprentice பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electrician, Fitter, Instrument Mechanic, Welder, Turner போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Trade Apprentice வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.07.2022 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 14 வயது எனவும், அதிகபட்சம் 24 வயது எனவும் NPCIL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள், OBC(NCL) பிரிவினருக்கு 03 ஆண்டுகள் மற்றும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

Trade Apprentice ஊக்கத்தொகை:

மேற்கண்ட பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.7,700 முதல் ரூ.8,855/- வரை மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

NPCIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் ITI-யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Short List செய்யப்பட்டு Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
NPCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NPCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் இறுதி நாளுக்குள் (15.07.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!