சென்னை: தங்கம் வாங்க இது தான் சரியான தருணம் – இன்று அதிரடியாய் குறைந்த விலை!

0
சென்னை: தங்கம் வாங்க இது தான் சரியான தருணம் - இன்று அதிரடியாய் குறைந்த விலை!
சென்னை: தங்கம் வாங்க இது தான் சரியான தருணம் - இன்று அதிரடியாய் குறைந்த விலை!
சென்னை: தங்கம் வாங்க இது தான் சரியான தருணம் – இன்று அதிரடியாய் குறைந்த விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி நகைகள் வாங்க முற்பட்டு வருகின்றனர்.

தங்கம் விலை:

இந்தியாவில் பெண்கள் தங்கத்தால் ஆன அணிகலன்களை அணிவதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். மேலும் தங்கம் என்பதும் ஒரு வகையான முதலீடும் கூட என்பதால் மக்கள் அதிக அளவில் தங்க நகைகள் வாங்குகின்றனர். உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பரவிய கொரோனா மற்றும் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவை தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்தது. மேலும் மத்திய அரசு தங்கத்தின் மீதான GST வரியை 3% உயர்த்தியது. அதனை தொடர்ந்து இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது.

இந்த இறங்குமதி உயர்த்தப்பட்ட ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ. 1000 வரை உயர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சற்று குறைந்து விற்கப்பட்டதால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்!

இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 38,400 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.60.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி 60,700-க்கும் விற்பனையாகி வருகிறது. சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!