தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் நவ.27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விபரம் இதோ!

கும்பகோணத்தில் (27.11.2021) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை தேடுவோர் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அதனால் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தோர் மீண்டும் பணிக்கு செல்ல முயன்று வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் ஏராளமான மக்கள் வேலையிழந்து மிகவும் சிரமப்பட்டனர். அப்போதைய நிதி நெருக்கடியில் நிறுவனங்களால் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அரசுக்கு கோரிக்கை!

தற்போது ஊரடங்கில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளனர். அதனால் மாவட்டம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கும்பகோணத்தில் நவம்பர் 27ம் தேதி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. 5ம் வகுப்பு முதல் கல்வி தகுதி உடையவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். வேலை நடுநர்கள் தங்களின் சுய விவரங்களை நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யாலாம். வேலை இல்லாதோர் இந்த முகாமில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here