தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.10) பள்ளிகள் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.10) பள்ளிகள் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.10) பள்ளிகள் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.10) பள்ளிகள் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

நவம்பர் 10ம் தேதியான நாளை வானிலை ஆய்வு மையம் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருப்பதை முன்னிட்டு அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை:

தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 11 ஆம்‌ தேதி காலை கரையை நெருங்கக் கூடும்‌ இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை, குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவ.11ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அங்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் தான் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

EPFO வங்கி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் – PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் அங்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடப்படும் தொடர் விடுமுறைகள் அனைத்தும் கூடுதல் வகுப்புகள் மூலம் ஈடுசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னரே அறிவித்திருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here