நவ.30 மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
தேர்தலை முன்னிட்டு நவம்பர் 30ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது விடுமுறை அறிவிப்பு:
நவம்பர் மாதம் நாட்டில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நவம்பர் 30ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நவ.17ம் தேதி இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!
தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் பொது விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்து மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.