தங்கம் வாங்க நல்ல நேரம் வந்தாச்சு.. இன்று அதிரடியாக குறைந்த விலை – உடனே முந்திக்கோங்க!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய காலை விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (22.11.2022) தங்கத்தின் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் தங்கம் ஆபரணமாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீடாகவும் உள்ளது. இதனால் உலக அளவில் இந்தியாவில் தான் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதும், தங்க விற்பனை அதிகமாகவும் நடக்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகு ரியல் எஸ்டேட் போன்ற பிற முதலீடுகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. அதிகமாக தங்கத்தின் மீதான முதலீடுகளை தான் மக்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் தங்கத்தின் விலையின் மீதான சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் கூட அதிக அளவில் கவனம் பெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தங்கத்தின் விலையானது உச்சத்தில் இருந்து வந்தது. தற்போது தான் சற்று குறைந்திருகிறது. அந்த வகையில் நேற்று 1 கிராம் ரூ.4,920 க்கும், 1 பவுன் ரூ.39,360 க்கும் தங்கத்தின் விலை இருந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் இன்றைய காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராம் ரூ. 15 குறைந்து ரூ.4,905க்கும், 1 சவரன் ரூ.120 குறைந்து ரூ. 39,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5351 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.