நவ.16 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இது தான்!
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய விழா காரணமாக நவம்பர் 16ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை தினம் அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகம் முழுவதும் அல்லாமல் குறிப்பிட்ட மாவட்டம் அல்லது பகுதிகளில் மட்டும் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் சிறப்பு தினங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் ஆனது நடைபாண்டு நவம்பர் 16ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
வங்கி தேர்வர்களுக்கு வந்த ஜாக்பாட் வாய்ப்பு – குறுகிய கால ஆஃபர்!
இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் மற்றும் கருவூலக பணிகளுக்கான ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படும் என்றும், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 25 ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.