TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர கால அட்டவணை வெளியீடு!
9494 இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கு 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு மையம் வெளியிட்டுள்ளது.
கால அட்டவணை:
ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் என பல பணிகளுக்கான இடங்களை அவ்வப்போது நிரப்பி வருகின்றனர். அதே போல இந்தாண்டும் ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலமாக 9494 ஆசியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – விஐபி தரிசனம் ரத்து!
3902 இடைநிலை ஆசிரியர், 1087 முதுநிலை ஆசிரியர் என மொத்தமாக 4989 காலியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இந்தாண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் போட்டி தேர்வு நடைபெறும். போட்டி தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு திட்டம்!
167 விரிவுரையாளர் பணிகளுக்கான காலி இடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கும் ஜூன் 2 ஆவது வாரம் தேர்வு நடத்தப்படும் மற்றும் இதற்கான அறிவிப்பும் மே மாதத்தில் வெளியாகும். மேலும் 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடைபெறும் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணிஇடங்களுக்கு நவம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடைபெறும் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.பொறியியல் கல்லூரிகளில் 104 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தேர்வு நடைபெறும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.