JEE தேர்வர்களுக்கான அட்மிட் கார்டு 2022 வெளியீடு – NTA தகவல்!
JEE முதன்மை 2022 2 வது அமர்வு தேர்வு வரும் ஜூலை 23 ஆம் தேதி முதல் நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அட்மிட் கார்டு பதிவிறக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.
JEE முதன்மை அட்மிட் கார்டு:
JEE முதன்மை 2022 2 வது அமர்வு தேர்வு ஜூலை 21 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் NTA இயக்குனர் வினீத் ஜோஷி, ஜூலை 21, 2022 முதல் NTA கூட்டு நுழைவுத் தேர்வு (JEE Main 2022) அமர்வு 2 தேர்வு நடைபெறாது என அறிவித்திருந்தார். மேலும், JEE முதன்மை 2022 அமர்வு 2 தேர்வு ஜூலை 23 ஆம் தேதிக்கு பிறகு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், JEE Main 2022 அமர்வு 2க்கான அட்மிட் கார்டுகளை விரைவில் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், JEE முதன்மை 2022 இரண்டாம் கட்டத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், JEE முதன்மை 2022 அமர்வு 2 தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று நுழைவு சீட்டினை விண்ணப்பப் படிவ எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் JEE முதன்மை நுழைவு அட்டையின் கட்டம் 2 ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
தமிழக ரயில்வே துறையில் வேலை – ரூ.2,25,000/- சம்பளம்
இதனையடுத்து, அமர்வு 2க்கான JEE முதன்மை 2022 அட்மிட் கார்டு ஜூலை 18 முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், JEE முதன்மை அமர்வு 2 ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடிய விரைவில் அட்மிட் கார்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று முதல் தேர்வர்கள் jeemain.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்