தமிழகத்தில் கோவில் கட்டுமான பணிகளுக்கான அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் கோவில் கட்டுமான பணிகளுக்கான அறிவிப்பு - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கோவில் கட்டுமான பணிகளுக்கான அறிவிப்பு - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கோவில் கட்டுமான பணிகளுக்கான அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், சில முக்கிய முடிவுகள் குறித்து நிபுணர்கள் முன்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை:

இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் நிலுவையில் உள்ள கட்டுமான பணிகள் நடைபெற தொடங்கின. இந்த நிலையில், இந்த பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டமன்ற அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டு வரும் கம்பிவட ஊர்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள், மனநலக் காப்பகம் அமைக்கும் பணிகள், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிர்வாக பயிற்சி மையம், திருமண மண்டபம் ஆகிய கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதை தவிர கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்துதல் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களும், பொறியாளர்களும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி எம்.கவிதா, திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here