தமிழக அரசு மாணவர்களுக்கான அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
தமிழக அரசு மாணவர்களுக்கான அறிவிப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழக அரசு மாணவர்களுக்கான அறிவிப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழக அரசு மாணவர்களுக்கான அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் கடந்த 23ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளை விட குறைந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி அன்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ம் தேதி அன்றும் வெளியாகின. இதில் அரசு பள்ளி மாணவர்களை பின்னுக்கு தள்ளி தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலும் அதிக மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் தற்போது எந்த காரணத்திற்காக அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள அரசு பள்ளிகளைக் கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து நடப்பு ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – இதோ முழு தகவல்களுடன்..!

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது, கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நேரடி வகுப்புகள் குறைவாகவே நடைபெற்றது. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தற்போது குறைந்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு குறித்த காலத்தில் தொடங்கப்பட்டுள்ளதால் பாடங்கள் முறைப்படி நடத்தி முடிக்கப்படும். இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்கள் தேர்வு மதிப்பெண்களை வைத்து தவறான முடிவை எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here