சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக அறிவிப்பு – ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி!

0
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக அறிவிப்பு - ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக அறிவிப்பு - ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக அறிவிப்பு – ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவும் நடைபெற்று வருவதாக தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

நடை திறப்பு

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை பொதுவாக 60 நாட்கள் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக மட்டுமே திறக்கப்படுவது வழக்கமாகும். இதை தவிர ஓணம், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை, ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும். இக்கோவிலின் நடை திறக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்படும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவில் கோலாகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

அதனால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையடுத்து திருவோண பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்பு நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு வழக்கான பூஜைகளும் (உதய அஸ்தமன பூஜை & படி பூஜை) , நெய் அபிஷேகமும் நடத்தப்படும். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் நாளை முதல் கோவிலின் நடை அடைக்கப்படும் வரை பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படும்.

விஜய் டிவி சீரியல்களில் அடுத்தடுத்து விலகும் நடிகர்கள்? ஷாக் ஆகும் ரசிகர்கள்!

இறுதியாக ஓணம் பண்டிகை முடிவடைந்தவுடன் கோவிலின் நடை 10ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 10ம் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான தகவல் மக்கள் தொடர்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here