தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோருக்கான அறிவிப்பு – அரசின் சிறப்பு வகுப்புகள்!

0
தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோருக்கான அறிவிப்பு - அரசின் சிறப்பு வகுப்புகள்!
தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோருக்கான அறிவிப்பு - அரசின் சிறப்பு வகுப்புகள்!
தமிழகத்தில் 10 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோருக்கான அறிவிப்பு – அரசின் சிறப்பு வகுப்புகள்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு சிறப்பு மாலை நேர வகுப்புகள் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சிறப்பு வகுப்புகள்:

தமிழக பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த துணை தேர்வுகளில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் நிலையில் அது குறித்து அறிவிப்பு ஒன்றை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நடைபெறவிருக்கும் துணை தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடையும் பொருட்டு அந்தந்த பாடம் சார்ந்த ஆசிரியர்கள் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 7) விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!

இந்த வகுப்புகள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னர் வரை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு அனைத்து மாணவர்களும் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற எளிதாக இருக்கும் என்பதால் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!