TNPSC ஆணையத்தில் 1083 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு – விண்ணப்பிக்க மார்ச் 4 கடைசி நாள்!

0
TNPSC ஆணையத்தில் 1083 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு - விண்ணப்பிக்க மார்ச் 4 கடைசி நாள்!
TNPSC ஆணையத்தில் 1083 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு - விண்ணப்பிக்க மார்ச் 4 கடைசி நாள்!
TNPSC ஆணையத்தில் 1083 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு – விண்ணப்பிக்க மார்ச் 4 கடைசி நாள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் காலியாக உள்ள 1,083 பணியிடங்கள் நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

காலியிடங்கள் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு ஆகிய துறையில் காலியாக இருக்கும் 1,083 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வானது மே 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மார்ச் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அக்னிபாத்” திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை மாற்றம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த தேர்வு மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணியில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பதவியில் 794 பணியிடங்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 236 இடங்கள், பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 18 இடங்கள், நகர் ஊரமைப்பு துறை வரைவாளர்(கிரேடு 3) 10 இடங்கள், தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்துறை முதலாள்(கிரேடு 2) 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பதாரர்கள் மார்ச் 4 ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 11ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான தேர்வானது சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!