தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த அறிவிப்பு – அமைச்சர் தகவல்!

0
தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த அறிவிப்பு - அமைச்சர் தகவல்!
தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த அறிவிப்பு - அமைச்சர் தகவல்!
தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த அறிவிப்பு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியாகி இருக்கும் நிலையில் இத்தேர்வில் மொத்தமாக 90.07% பேர் தேர்ச்சி பெற்றதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.

தேர்ச்சி விவரங்கள்

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்சமயம் வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து அவர் பேசும் போது, ‘தமிழகத்தில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 670 பேர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் மற்றும் மாணவர்கள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் ஆவர். இப்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மொத்தம் 8,21,994 ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.07% ஆகும். இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 073 பேர் என்ற அடிப்படையில் சுமார் 94.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண் இல்லாமலேயே பதிவிறக்கம் செய்வது எப்படி?

மற்றபடி மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் என்ற அடிப்படையில் 8.83% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% அதிகம் ஆகும். அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 95.2% ஆக இருந்தது. அதே போல கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வரும் ஜூன் 24ம் தேதி முதல் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!