TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு!

0
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு!
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு!
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முதல் நிலை தேர்வு குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுக்கான டிக்கெட்டை அண்மையில் தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில் 5,529 காலி பணியிடங்கள் உள்ள குரூப் 2 பதவிக்கு வரும் 21ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டிபோட்டு இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கான பதவிகளை பொருத்தவரையில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நடக்கும். நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை பொருத்தவரையில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் ஆகிய நிலைகளில் நடக்கும்.

TN Job “FB  Group” Join Now

கடந்த 2 ஆண்டுகளாக TNPSC தேர்வுகள் நடைபெறாததால், இந்த தேர்வுக்கு இம்முறை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 21ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. குரூப் 2, 2A முதல்நிலை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in-யில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்வுக்காக 4,012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று TNPSC அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

TNPSC குரூப் 2 & 2A ஹால் டிக்கெடை பதிவிறக்குவது எப்படி:

  • முதலில் தேர்வர்கள் TNPSC -யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in அல்லது tnpscexams.in பார்வையிடவும்.
  • பின்னர் ‘ஹால் டிக்கெட் டவுன்லோட்’ பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
    இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  • பின்னர், உங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு என்னை உள்ளிட்டு உள்நுழையவும்.
  • இப்போது TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!